وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا
wa qur'ānan faraqnāhu litaqra'ahū ‘alan-nāsi ‘alā mukṡiw wa nazzalnāhu tanzīlā(n).
மேலும், (முஹம்மதே!) நீர் அதை மக்களுக்குப் படிப்படியாக ஓதிக் காட்டுவதற்காக, நாம் குர்ஆனைப் படிப்படியாக இறக்கினோம்.
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛ كَذٰلِكَ ۛ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا
wa qālal-lażīna kafarū lau lā nuzzila ‘alaihil-qur'ānu jumlataw wāḥidatan - każālika - linuṡabbita bihī fu'ādaka wa rattalnāhu tartīlā(n).
மேலும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள், “ஏன் அது அவருக்கு ஒரேயடியாக அருளப்படவில்லை?” (முஹம்மதே!) அதைக் கொண்டு உமது உள்ளத்தை நாம் பலப்படுத்துவதற்காகவே அது அருளப்பட்டது; மேலும் நாம் அதை படிப்படியாக (மெதுவாகவும், சரியாகவும்) ஓதுகிறோம்.